[X] Close
 

அது இசக்கிமுத்துவின் தனிப்பட்ட கருத்து!- தட்டிக் கழித்த அழகிரியின் மகன்


alagiris-son-on-new-party

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Sep, 2018 15:00 pm
  • அ+ அ-

தனி அமைப்பு தொடங்குவது குறித்து ஆலோசனை மட்டுமே நடைபெற்று வருகிறது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார் அழகிரியின் மகன் துரை தயாநிதி.

"எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது" என திமுகவில் மீண்டும் இணைவதற்கான காத்திருப்பு குறித்து அழகிரி அண்மையில் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த் பேட்டியில் கூறியிருந்தார்.

கடந்த 5-ம் தேதி சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி மேற்கொண்ட பின்னர் அழகிரி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அழகிரியின் ஆதரவாளரான இசக்கிமுத்து, "கலைஞர் எழுச்சி பாசறை அல்லது கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் மு.க.அழகிரி புதிய அமைப்பை துவக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அதேவேளையில் இது தேர்தலுக்கான அமைப்பாக இருக்காது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், உசிலம்பட்டியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அழகிரியின் மகன் துரை தயாநிதி தனி அமைப்பு குறித்த கேள்விக்கு "அது இசக்கிமுத்துவின் கருத்து. நாங்கள் எதுவும் முடிவு செய்யவில்லை. எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் முடிவு செய்யவில்லை. இது இசக்கிமுத்துவின் கருத்தே தவிர அப்பாவின் கருத்து இல்லை" எனக் கூறிச்சென்றார்.

[X] Close