ஆர்.கே.நகர் ஃபார்முலா எல்லாம் திருப்பரங்குன்றத்தில் செல்லாது!- உதயகுமார்

ஆர்.கே.நகர் ஃபார்முலா எல்லாம் திருப்பரங்குன்றத்தில் செல்லாது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயகுமார், "மதுரை மாவட்டம்தான் தேர்தலுக்கு நிறைய ஃபார்முலாக்கள் உருவான இடம். ஆனால், அதிமுக எல்லா ஃபார்முலாக்களையும் உடைத்தெறிந்தது. இப்போது ஆர்.கே.நகர் ஃபார்முலா என்கிறார்கள்.
அது என்ன ஃபார்முலா? எல்லோருக்கு ரூ.20 டோக்கன் கொடுத்த ஃபார்முலா. அந்த ஆர்.கே.நகர் ஃபார்முலா எல்லாம் திருப்பரங்குன்றத்தில் செல்லாது" என்றார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என மதுரையில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகள் முன்னேற்படை கவனிக்கும் அதிமுகவினர் அனைவரும் அமமுக தலைவர் டிடிவி தினகரனையே விமர்சிக்கின்றனர்.
ஏற்கெனவே, "தான் இல்லாத திமுகவால் திருப்பரங்குன்றத்தில் ஜெயிக்க முடியாது. அங்கு திமுக 4-வது இடத்துக்கு செல்லும்" எனக் கூறினார். இந்நிலையில், அதிமுக தனக்கு நேரடி போட்டியாக டிடிவி தினகரனைத்தான் கருதுகிறதோ என்ற கருத்து உருவாகி இருக்கிறது.