[X] Close

அமமுக ஒரு அமைப்பே இல்லை; தினகரன் தனித்து நிற்கப்போகிறார்: செல்லூர் ராஜூ ஆரூடம்


sellurraju-slams-ttv-dhinakaran

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Sep, 2018 10:13 am
  • அ+ அ-

"அமமுக ஒரு அமைப்பே இல்லை. தேர்தல் வந்தால் தொண்டர்கள் எல்லோரும் இங்கே வந்துவிடுவார்கள். தலைவர் மட்டுமே தனித்து நிற்கப்போகிறார்" என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். தொடக்கமே அருமையாக அமைந்துள்ளது.

இது நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்குகூட ஒரு அடித்தளமாக அமையும். அதிமுக எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது யாரையும் தரக்குறைவா விமர்சிக்கப்போவதில்லை அரசின் சாதனைகளை மக்களிடம் சொல்லப்போகிறோம். யாரையும் தரக்குறைவாக பேச மாட்டோம்.

அமமுக ஒரு அமைப்பே இல்லை. ஒரு தனிமனிதர் கோபத்தில் வெளியே சென்றிருக்கிறார். தேர்தல் வந்தால் எல்லோரும் இங்கே வந்துவிடுவார்கள். தொண்டர்கள் எல்லாம் அதிமுகவுக்கு வந்துவிட அமமுகவில் தலைவன் மட்டும் தனித்து நிற்கப்போகிறார்" எனப் பேசினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close