[X] Close
 

ஹாட்லீக்ஸ் : சாம்பார் வாளியும் அமைச்சர் சபதமும்!


hot-leaks-minister-kamaraj

அமைச்சர் காமராஜ்

  • kamadenu
  • Posted: 14 Sep, 2018 09:38 am
  • அ+ அ-

நீதிமன்றத்தில் அனுமதிபெற்று மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடத்திய தினகரன், “இந்த மாவட்டத்தில் அமைச்சராக இருக்கும் காமராஜ் எங்கள் வீட்டு விசேஷங்களில் சாம்பார் வாளி தூக்கியவர். அவருக்கெல்லாம் இப்போது மீசை முளைச்சிருச்சு; நம்மளையே எதிர்த்துப் பேசுறார்” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டுப் போனார்.

இதற்கு பதிலடி கொடுக்க செப்டம்பர் முதல் தேதி ஓபிஎஸ்-ஸை வைத்து அதே மன்னார்குடியில் கூட்டம் போட்ட அமைச்சர் காமராஜ், “தினகரன் எம்.பி-யாக இருக்கும் போது செய்த வேலைகளை எல்லாம் வெளியில் சொன்னால் அவரால் வெளியில் தலைக்காட்டவே முடியாது” என்று எகிறினார். 

அத்துடன் நிறுத்தாமல் கடந்த வாரம், தனது ஆதரவாளர்களை அழைத்து ரகசிய கூட்டம் போட்ட அமைச்சர், “திருவாரூர் இடைத் தேர்தல் ஈபிஎஸ்-ஸுக்கும் தினகரனுக்குமான போட்டியில்லை. நானா தினகரனான்னு ஒரு கை பார்க்கப் போகும் தேர்தல்... இந்தத் தேர்தல்ல தினகரன் நிறுத்தும் நபரைத் தோற்கடிச்சே ஆகணும். அதுக்காக எத்தனை கோடி செலவானாலும் பாத்துருவோம்” என சபதமே செய்தாராம்!



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close