[X] Close

வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்!- ஸ்டாலினுக்கு எச்.ராஜா கண்டனம்


hraja-slams-stalin

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Sep, 2018 21:07 pm
  • அ+ அ-

மல்லையா வெளிநாடு சென்ற விவகாரத்தில் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த விஜய் மல்லையா நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வரும் போது நிதி அமைச்சரை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தாக மல்லையா ஒப்புக்கொண்டுள்ளார். இதையே நேற்று திரு.ஜெட்லி அவர்களும் கூறியுள்ளார். வீண் வதந்திகளை பரப்புவது கண்டிக்கத்தக்கது" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஸ்டாலின், "வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம்,பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது!
பிரதமர், அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும்! இல்லையேல் அவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும்!" எனப் பதிவிட்டிருந்தார். அதற்கு எச்.ராஜா இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close