[X] Close

திருமாவளவன் கருத்துக்கு தமிழிசை பதிலடி


tamilisai-reply-to-thirumavalavan-speech

  • kamadenu
  • Posted: 13 Sep, 2018 16:46 pm
  • அ+ அ-

பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்ற திருமாவளவன் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

தேசிய வங்கிகளில் உள்ள வாராக்கடனுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று புதுச்சேரி பத்திரிகையாளர் மத்தியில் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மன்மோகன்சிங் செய்த தவறுக்கு மோடி அவர்களை விசிக  தலைவர் திருமாவளவன் பதவி விலகச் சொல்வது நியாயமா?. 

வாராக்கடன்களுக்கு நடவடிக்கை கோரி காங்கிரசின் மன்மோகன் சிங்குக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியதாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஐன் கூறியுள்ள நிலையில் மன்மோகன் தவறுக்கு மோடியை பொறுப்பேற்க சொல்வது என்ன நியாயம் ?

இவ்வாறு தமிழிசை தெரிவித்திருக்கிறார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close