[X] Close

கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை பாஜக அரசு: ஸ்டாலின் சாடல்


stalin-tweet-about-vijay-mallaya

  • kamadenu
  • Posted: 13 Sep, 2018 15:29 pm
  • அ+ அ-

கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை பாஜக அரசு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்

வங்கிக் கடன் மோசடியில் சிக்கி லண்டனில் வழக்கை எதிர்கொண்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டுக் கிளம்பும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். இதற்கு அருண் ஜேட்லி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

விஜய் மல்லையாவின் பேச்சை எதிர்க்கட்சியினர் கையில் எடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக அருண் ஜேட்லி பதவி விலக வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம்,பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது! பிரதமர், அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும்! இல்லையேல் அவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும்!

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close