[X] Close

முதல்வர் பதவிப் போட்டியால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரிய வாய்ப்பு: அ.ம.மு.க. நிர்வாகி புகழேந்தி கணிப்பு


pugazhandi-press-meet

  • kamadenu
  • Posted: 13 Sep, 2018 09:50 am
  • அ+ அ-

முதல்வர் பதவிப்போட்டியால் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனி சாமி இடையே தகராறு ஏற்பட்டு பிரிய வாய்ப்புள்ளது என அமமுக கர்நாடகா மாநிலச் செயலாளர் புகழேந்தி தெரிவித்தார்.

கொடைக்கானலில் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: ஓ. பன்னீர்செல்வம், கே. பழனிசாமி இடையே தகராறு ஏற்பட்டு பிரிய வாய்ப்புள்ளது. இருவரும் இணைந்த பிறகு பாதி நாட்கள் முதல்வராக கே. பழனிசாமியும், பாதி நாட்கள் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி பஞ்சாயத்து செய்திரு ந்தார். இதில் கே. பழனிசாமிக்குரிய பதவிக் காலம் முடிந்துவிட்டது.

தற்போது ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரு கிறார். ஆனால், பதவி ஆசையால் சசிகலாவையே ஏமாற்றிய கே. பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை விட்டு வைப்பாரா? டெல்லியில் பிரதமர் மோடியை, ஓ.பன் னீர்செல்வம் சந்தித்த அன்றே போடி தொகுதி மக்கள் அவருக்கு டாட்டா காட்டிவிட்டார்கள். அ.ம.மு. க.வுக்கும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., இடையே மட்டும்தான் மோதல். சசிகலாவை எந்த சட்டமன்ற உறுப்பினரும் விமர்சிப்பதில்லை. என்னு டைய துறையில் ஊழல் இல்லை என்று வேலுமணி கூறிவருவது, இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. எதிர்வரும் காலங்களில் பாஜகவோடு அ.ம.மு.க. ஒரு போதும் கூட்டணி வைக்காது. தாயகம் திரும்பும் தமிழக மக்களே, பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரும் விமானத்தில் ஒருபோதும் பயணிக்காதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close