[X] Close
 

யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் முடிவு செய்வார்: எல்.கே.சுதீஷ் தகவல்


lksudeesh-speech-about-dmdk

  • kamadenu
  • Posted: 12 Sep, 2018 10:16 am
  • அ+ அ-

தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு விஜயகாந்த் முடிவு செய்வார் என கட்சியின் மாநிலச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 12.10.2017-ம் தேதி திருச்சி காந்தி மார்க்கெட் நுழைவுவாயில் அருகே தேமுதிக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எல்.கே.சுதீஷ் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் லாரன்ஸ், காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் முன் அனுமதியின்றி கூடியதாகவும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் எல்.கே.சுதீஷ் உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருச்சி ஜே.எம்.5 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட 6 பேரும் ஆஜராகினர். பின்னர் இவ்வழக்கின் விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் நீதிமன்ற வளாகத்தில் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். விரைவில் நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் பேசுவார். தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு விஜயகாந்த் முடிவு செய்வார்" என்றார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close