[X] Close
 

ரஜினி பச்சைத்தமிழன்னா... நான் வெள்ளைத்தமிழன்! - சீமான் ஆவேசப் பேச்சு


seeman-rajini-speech

சீமான்

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Sep, 2018 11:41 am
  • அ+ அ-

ரஜினி பச்சைத்தமிழன் என்று சொல்லிக்கொள்கிறார். அப்படியென்றால் நான் வெள்ளைத் தமிழன் என்று நாம் தமிழர் அமைப்பாளர் சீமான் பேசினார்.

சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் சீமான் பேசியதாவது:

தாய்மொழியை மதிக்கும் இனம், கடுகளவு என்றாலும் மலையளவு உயர்ந்ததற்குச் சமம். அதேபோல், தாய்மொழியைக் கூட தெரிந்துகொள்ளாத இனம், மலையளவு என்றபோதும் கடுகளவு சிறுத்துப் போய்விடும்.  

பெற்ற தாயை பட்டினி போட்டுவிட்டு, எத்தனை ஆயிரம் பேருக்கு அன்னதானம் போட்டாலும், அதெல்லாமே வீணாகிப்போகும். அதேபோல தாய்மொழியை மதிக்காமல் இருப்பவர்கள், எந்த மொழியைக் கற்றாலும் எந்தப் பலனும் இல்லை.

நம்முடைய இனம், நம்முடைய மொழி என உறுதியாக இருக்கவேண்டும். இப்போது ரஜினி திடீரென்று ‘நான் பச்சைத்தமிழன்’ என்று சொல்லிக்கொள்கிறார். அவர் பச்சைத்தமிழன் என்றால், நான் வெள்ளைத்தமிழன். மஞ்சள்தமிழன் என்று சொல்லிக்கொள்ளட்டுமா? ரஜினி, எங்கள் இனத்துடன் சேர்ந்து வாழ்வதற்காகச் சொல்லுகிறாரா? எங்களை ஆள்வதற்காகச் சொல்லுகிறாரா?வாழ்வதற்காக என்றால், இனம் மாறவேண்டும் என்கிற அவசியமில்லை. ஆள்வதற்காக என்றால், ரஜினியை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

நம் தாய்மொழியைக் காப்போம். நம் தமிழினத்தைக் காப்போம்.

இவ்வாறு சீமான் பேசினார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close