[X] Close
 

எப்படி கூட்டிக் கழிச்சி பாத்தாலும் பாஜகவின் பெட்ரோல் கணக்கு சரியா வரலையே!


truth-of-hike-in-petrol-prices

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Sep, 2018 10:24 am
  • அ+ அ-

கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா வரும்னு தமிழ் சினிமாவில் ஒரு பிரபல வசனம் இருக்கு. இன்னிக்கு ட்ரெண்டல் அந்த வசனத்ததான் நெட்டிசன்கள் கொஞ்சம் எப்படி கூட்டிக் கழிச்சி பாத்தாலும் பாஜகவின் பெட்ரோல் கணக்கு சரியாவரலையே! என புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை நாடு முழுவதும் நடந்த முழு அடைப்புப் போராட்டத்தால் வட மாநிலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், பெட்ரோல் விலை குறித்து பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு கிராஃப் போட்டு கணக்கு செய்திருக்கிறார்கள். இந்தக் கணக்குதான் இன்று இணையத்தில் வைரல்.

அந்த கிராஃபில் 2004 மே மாதத்தில் டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.33.71 ஆக இருந்தது. 2009 மே மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.40.62 ஆக இருந்தது 2014 மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.71.41 என்ற அளவில் இருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று விலைப்பட்டியலும் கிராஃப் ஏறுவதுபோல் உள்ளது. அடுத்ததாக செப்டம்பர் 10 2018-ல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.73 எனக் குறிப்பிட்டு கிராஃப் கீழே இறங்குவதுபோல் இருக்கிறது.

இதைத் தொடர்ந்து இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் 71 பெருசா 80 பெருசா என்று கிண்டல் ட்வீட்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

சிலர் இப்படியெல்லாம்கூடவா எங்களை ஏமாற்றுவீர்கள் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளனர்.
ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது என்பது போல் பாஜகவுக்கு ஆதரவாகவும் ஒருவர் ட்வீட் செய்திருக்கிறார். அந்த அறிவுஜீவி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையை 2014-ல் இருந்து ஒப்பிட்டு தற்போது நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு சில்லறை சந்தையில் பெட்ரோல் விலை குறைவே என விவரித்திருக்கிறார்.

இதுதான் அவர் கூறும் கணக்கு:

16-06-2004 Int Crude Price was $34.56, Petrol Rs 33.71 ( Int Crude Price - சர்வதேச கச்சா எண்ணெய் விலை )

15-06-2009 Int C. P. was $56.34 (+$21.78), Petrol price Rs 40.62

16-06-2014 Int C. P. was $102.02 (+$45.680) Petrol price Rs 71.410

10-06-2018 Int C. P. is $67.75 (-34.25) petrol Rs 80.73

இதில் விளக்கம் வேற..

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. எனவே பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. விலையைக் குறைத்தால் அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், அந்தக் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close