[X] Close

பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை: ப.சிதம்பரம் கடும் சாடல்


pchidambaram-tweet-about-petrol-diesel-price-hike

  • kamadenu
  • Posted: 10 Sep, 2018 14:22 pm
  • அ+ அ-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. 

இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள் தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள். 

பெட்ரோல், டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு ஏன் மத்திய அரசு முரட்டுத்தனமாக மறுக்கிறது?. கச்சா எண்ணெய் விலை  $107 ஆக இருந்த போது விலை குறைவு. இப்பொழுது கச்சா எண்ணெய் விலை $ 78 ஆக இருக்கும் போது விலை உயர்வு! ஏன்? ஏன்?

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close