[X] Close
 

வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்: முதல்வர் நாராயணசாமி பேச்சு


narayanaswamy-speech-about-bjp

  • kamadenu
  • Posted: 10 Sep, 2018 12:20 pm
  • அ+ அ-

2019-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் மோடி, அமித்ஷா மட்டு மல்ல பாஜகவையே வீட்டுக்கு அனுப்ப போகிற தேர்தல் என்று முதல்வர் நாராயணசாமி தெரி வித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் ஆளும் மாநிலமான புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

போராட்டத்தை நடத்துவது தொடர்பான செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் புதுச்சேரி தலைமை காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது முதல்வர் நாராய ணசாமி பேசியதாவது: புதுச்சேரி காங்கிரஸாரிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், நம்முடைய ஒரே குறிக்கோள், தலைவர் ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பதுதான். அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். நாட்டின் வளர்ச்சி தற்போது பின்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டை காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி களால்தான் முடியும்.

காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 160 டாலராக இருந்தது. அப்போது, பெட்ரோல் ரூ.60-க்கும், டீசல் ரூ.55-க்கும் கொடுத்தோம். தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 93 டாலராக உள்ளது. ஆனால் இன்று மும்பையில் ரூ.95, சென்னையில் ரூ.85, புதுவையில் ரூ.80-ஆக பெட்ரோல் விலை உள்ளது. நம்முடைய மாநிலத்தில் வாட் வரி குறைத்து தருவதால் இந்த விலை வித்தியாசம் உள்ளது. நாம் வரியை குறைத்து கொடுத்தும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வருகிறது. அதனை சுத்திகரித்து அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். அதுவும் டீசல் ரூ.34-க்கும், பெட்ரோல் ரூ.34-க்கும் விற்கின்றனர். நாம் என்ன பாவம் செய்தவர்களா?

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தி விற்பதன் மூலம் மத்திய அரசுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி வந்துள்ளது. அந்த பணம் எங்கு போனது? நாம் கேட்டால் ஒரு பைசா கூட தர மறுக் கிறார். இதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். 11 லட்சம் கோடி வந்ததால்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது. இல்லையென்றால் 5 சதவீதமாகத்தான் இருக்கும்.

2019-ல் நடைபெறும் நாடாளு மன்ற தேர்தல் மோடி, அமித்ஷா மட்டுமல்ல பாஜகவையே வீட்டுக்கு அனுப்ப போகிற தேர்தல் ஆகும். தேசிய அளவிலான பந்த் போராட்டத்துக்கு பாஜக, அதிமுகவை தவிர திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தருகிறார்கள். இதில் முதல்வர், அமைச்சர்களாகி நாங்கள் நேரடியாக கலந்து கொள்ள முடியாது. நீங்கள் (நிர்வாகிகள்) கூறினால் கலந்து கொள்வோம். எங்களுக்கு பதவி ஒன்றும் முக்கியமில்லை என்று குறிப்பிட்டார். அப்போது திடீரென புதுச்சேரியில் நாளை பேருந்துகள் ஓடினால் உடைப்போம் என நிர்வாகிகள் வேகமாக கூறினர். இதற்காக வழக்குப்பதிவு செய்தால் அமைச்சர்கள், நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிடுவோம் என்று ஆவேசமாக பேசினர். அவர்களை அங்கிருந்தோர் சமாதானப்படுத்தினர்.

[X] Close