[X] Close
 

ஹாட்லீக்ஸ்: மாந்திரீகம்... மை... திமுக!


hot-leaks-dmk

  • kamadenu
  • Posted: 10 Sep, 2018 10:32 am
  • அ+ அ-

யாகம், மாந்திரீகம், ஜாதகம் இதெல்லாம் அதிமுகவில்தான் களைகட்டும். ஆனால் இப்போது, நாத்திகம் பேசும் திமுக-விலும் பலர் இந்த ரூட்டில் போக ஆரம்பித்துவிட்டார்கள்.

திமுக சென்னை மாவட்டச் செயலாளர் ஒருவர் மாவட்டக் கழகக் கூட்டம் போட்டால் அன்று காலையில் கேரளத்தில் தனது ஆஸ்தான மாந்திரீகரின் வீட்டில் இருப்பாராம்.

அவர் மந்திரித்துப் பூசிவிடும் மையை வைத்துக் கொண்டு அப்படியே விமானத்தைப் பிடித்து சென்னையில் வந்து இறங்குவாராம்.

அந்த மை கலையாமல் மாவட்டக் கழகக் கூட்டம் நடக்கும் வழக்கமான ஹோட்டலுக்கு வந்து கூட்டத்தை நடத்துவாராம். இப்படிச் செய்வதால் கட்சிக்குள் தனக்கெதிராக எந்தச் சிக்கலும் வராது என்பது அவரதுநம்பிக்கை.

 இனிஷியலையே பெயர் நீளத்துக்கு வைத்திருக்கும் இன்னொரு மாவட்டச் செயலாளர், தஞ்சைப் பகுதியில் உள்ள கோயில்களில் தனக்குப் பரிகாரப் பூஜை செய்துகொடுப்பதற்காக ராமனின் பெயர் கொண்ட ஒருவரை நிரந்தரமாகப் பிடித்து வைத்திருக்கிறாராம். 

அண்மையில் அவரைத் தொடர்பு கொண்ட இனிஷியல் மாவட்டம், “அது ஒண்ணுமில்லப்பா... எப்பையும் என்னப் பார்த்தா சிரிச்சுக்கிட்டே வர்ற தளபதி, இன்னிக்கி ஏனோ தெரியல... ஏர்போர்ட்ல என்னைய பார்த்துட்டு மூஞ்சியத் திருப்பிக்கிட்டுப் போயிட்டாரு. என்ன ஏதுன்னு கேட்டு இதுக்கும் ஒரு பூஜையைப் போட்டுருப்பா..!” என்று சொன்னாராம்!

 

[X] Close