[X] Close

ஆட்சியைக் கவிழ்க்க திமுக சதி! - தம்பிதுரை எம்.பி. குற்றச்சாட்டு


thambidurai

தம்பிதுரை எம்.பி.

  • வி.ராம்ஜி
  • Posted: 09 Sep, 2018 15:26 pm
  • அ+ அ-

தமிழகத்தில் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து திமுக சதி செய்கிறது என தம்பிதுரை எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக எம்.பி.தம்பிதுரை, நிருபர்களிடம் பேசும் போது கூறியதாவது:

அதிமுக ஆட்சி, மக்களுக்கான ஆட்சியாக சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக, எங்களின் அதிமுக ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிடவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஏதேதோ செய்து பார்த்தார்.

சட்டையைக் கிழித்துக்கொண்டார். வெளிநடப்பு வெளிநடப்பு என்று செய்துகொண்டே இருந்தார். இப்போது டில்லியுடன் தொடர்புகொண்டு, எங்கள் ஆட்சியை அகற்ற நினைக்கிறார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, எங்களின் ஆட்சியைக் கவிழ்க்க, திமுக சதி செய்கிறது. ஜனநாயகத்துக்கான எதிரான செயல் இது.

இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.  

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close