[X] Close

மன்னார்குடி கும்பலுக்கு பயப்படவில்லை நான்! - ஐ.ஜி.ரூபா


ig-roopa

ஐ.ஜி. ரூபா

  • வி.ராம்ஜி
  • Posted: 09 Sep, 2018 11:31 am
  • அ+ அ-

மன்னார்குடி கும்பல் மிரட்டுவார்கள், ஏதாவது செய்துவிடுவார்கள் என்றெல்லாம் என்று என்னைப் பயமுறுத்தினார்கள். ஆனால் அதற்கெல்லாம் நான் பயப்படவில்லை. என்னுடைய கடமையை நான் செய்தேன் என்று பெங்களூரு ஐ.ஐ.ரூபா தெரிவித்தார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலாவுக்கு வழங்கப்படுகிற சலுகைகள் குறித்து ஐ.ஜி. ரூபா, விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பித்தார். அப்போது இந்த விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்த நிலையில், கோவையில் ஒரு விழாவுக்கு வந்திருந்த ஐ.ஜி. ரூபா நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

பரப்பன அக்ராஹாரா சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்படும் சலுகைகளையும் விதிமீறல்களையும் பற்றி விசாரித்து அறிக்கை வெளியிட்டேன். இதற்காக, மன்னார்குடி கும்பல் உங்களை மிரட்டுவார்கள், ஏதாவது செய்தாலும் செய்துவிடுவார்கள் என்றெல்லாம் பலரும் பயமுறுத்தினார்கள்.

ஆனால், மன்னார்குடி கும்பலுக்கெல்லாம் நான் பயப்படவில்லை. மாறாக, என் கடமையை நான் செய்தேன். என் வேலையை, எவ்வளவு நேர்மையாகவும் உண்மையாகவும் செய்யமுடியுமோ அப்படித்தான், இந்த விஷயத்தில் நான் செயல்பட்டேன்.

நேர்மையுடன் பணியாற்றுகிற போது, இதுபோன்றவர்களிடம் இருந்து அச்சுறுத்தல் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அதற்காக, நம் கடமையில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கிவிடக்கூடாது.

இவ்வாறு ஐ.ஜி.ரூபா தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close