[X] Close
 

ஹாட்லீக்ஸ் : மன்னிப்பு கேட்க வைத்த கே.என்.நேரு!


hot-leaks-knnehru

திருச்சி முக்கொம்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

  • kamadenu
  • Posted: 09 Sep, 2018 09:56 am
  • அ+ அ-

திமுக தலைவர் ஸ்டாலின் முக்கொம்பு வந்திருந்தபோது முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் முகநூல் அட்மின் முத்தமிழ் கருணாநிதிக்கு திருச்சி பத்திரிகையாளர்கள் சார்பில் செமத்தியான கவனிப்பு நடந்தது. 

ஸ்டாலின் வருகையையும், பேட்டியையும் பத்திரிகையாளர் மும்முரமாக படமெடுத்துக்கொண்டிருந்தபோது அவர்களுக்குப் பெரும் இடையூறாய் குறுக்கும் நெடுக்குமாக ஓடிஓடி தனது செல்போனில் படமெடுத்துக் கொண்டிருந்தார் முத்தமிழ் கருணாநிதி. 

பத்திரிகையாளர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காத அவர், சேனல் கேமராமேன் ஒருவரை தாமரைக்கனி பாணியில் லேசாக தட்டவும் செய்தார். 

இதனால் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர்கள் ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பியதும் அட்மினை ‘செம்மையாக’ கவனித்து அனுப்பினர். பின்னர் விஷயம் தெரிந்து, பத்திரிகையாளர்களை அழைத்து வருத்தம் தெரிவித்துக் கொண்டதுடன் அட்மினை மன்னிப்பும் கேட்கவைத்தார் நேரு.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close