[X] Close

ஊழலில் கொடிகட்டி பறக்கும் அதிமுக அமைச்சர்களில் நம்பர் 1 வேலுமணி: ஸ்டாலின் தாக்கு


stalin-slams-velumani

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Sep, 2018 11:26 am
  • அ+ அ-

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசில் எல்லா அமைச்சர்களும் அவர்களது துறையில் ஊழலில் ஈடுபட்டுவருகின்றனர். ஊழலில் கொடிகட்டி பறக்கும் அதிமுக அமைச்சர்களில் நம்பர் 1 வேலுமணி என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான கோடிகள் பெருமான அரசு கான்டராக்ட் பணிகள் கிடைக்க வழி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டியில், "ஏற்கனவே குட்கா ஊழல் குறித்த செய்திகள் வெளியானபோது அது குறித்து சட்டப்பேரவையில் பேசினோம். அந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெறுவதை உறுதி செய்தோம். அண்மையில் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடந்திருக்கிறது. இப்போது, அமைச்சர் வேலுமணி மீதான குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.

இது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசில் எல்லா அமைச்சர்களும் அவர்களது துறையில் ஊழலில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையே உணர்த்துகிறது.

ஊழலில் கொடிகட்டி பறக்கும் அதிமுக அமைச்சர்களில் வேலுமணிதான்  நம்பர் 1" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close