[X] Close

அழகிரி பேரணியை சிறுமைப்படுத்தவே 5-ம் தேதி சிபிஐ ரெய்டு: தம்பிதுரை தாக்கு


thamidurai-slams-centre

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Sep, 2018 18:58 pm
  • அ+ அ-

அழகிரி பேரணியை சிறுமைப்படுத்தவே குட்கா ஊழல் விசாரணையில் சிபிஐ ரெய்டு நடத்த 5-ம் தேதியை தேர்ந்தெடுத்ததாகவும் திமுகவுக்கும் பாஜகவுக்கு இடையே உறவு இருப்பதாக அதிமுக மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தம்பிதுரை, "திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அமித்ஷாவை அழைத்தார்கள். ஆனால், அவர் வரமுடியாவிட்டாலும்கூட பாஜகவின் மூத்த தலைவர் நிதின் கட்கரியை அனுப்பிவைத்தார்கள்.

அமித் ஷாவை அழைத்தவர் அதிமுகவுக்கு அழைப்புவிடுக்கவில்லை.

எல்லோருக்குமே தெரியும் அழகிரி 5-ம் தேதி அமைதிப் பேரணியை அறிவிருந்தார் என்பது. இருந்தபோதும் குட்கா ஊழல் தொடர்பாக 5-ம் தேதிதான் ரெய்டு நடத்த சிபிஐ-க்கு கிடைத்ததா? அழகிரி பேரணியை சிறுமைப்படுத்தவே, நிகழ்ச்சி முக்கியத்துவம் பெறக்கூடாது என்பதற்காகவே குட்கா ஊழல் விசாரணையில் சிபிஐ ரெய்டு நடத்த 5-ம் தேதியை தேர்ந்தெடுத்தது. இதிலிருந்தே தெரியும் பாஜக -- திமுக உறவு என்னவென்பது" என்றார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close