[X] Close

அழகிரிக்காக வரிந்துகட்டும் பாஜக!- எச்.ராஜாவும், பொன்னாரும்தான் சாட்சி


h-raja-pon-radhakrishnan-backs-alagiri

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Sep, 2018 12:42 pm
  • அ+ அ-

கருணாநிதி மறைவுக்குப் பின் அவரது நினைவிடத்துக்கு குடும்பத்துடன் சென்ற அழகிரி, "எனது ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவிக்க வந்தேன்" என்று சொன்னபோதே அழகிரியை பாஜக இயக்குகிறது என்ற விமர்சனமும் வரத் தொடங்கியது.

காரணம் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடத்திலிருந்துதான் வேறு ஒரு அரசியலைத் தொடங்கினார். அப்போதும் பாஜக பின்னணி சலசலக்கப்பட்டது.

இந்நிலையில், அழகிரி நடத்திய பேரணியை எச்.ராஜா ஆதரித்திருப்பதும் பாஜக பின்னணி இருக்குமோ என்ற பேச்சுக்களையும் அதிகரித்திருக்கிறது. எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அமர்ந்திருக்கும் படத்தைப் பகிர்ந்து, "இதுக்கு பேர் அழகிரி effect னு சொல்லலாமா?" என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நடத்திய பேரணி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், திமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என திமுக மட்டுமின்றி, மாற்றுக்கட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், எச்.ராஜா மட்டும் அழகிரி பேரணியால் ஸ்டாலின் ஏதோ மிரண்டுவிட்டதுபோல் ட்வீட் செய்திருக்கிறார்.

இதேபோல், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், "சென்னையில் மு.க.அழகிரி நடத்திய பேரணி தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைத்துள்ளது" எனக் கூறியுள்ளார். அழகிரியை பாஜனதா இயக்குவதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கும், "நாங்கள் யாரையும் இயக்கவில்லை. யாரையும் வளர்க்க விரும்பவில்லை. நாங்கள் எங்கள் கட்சியை வளர்க்கத்தான் நினைக்கிறோம். அழகிரி தி.மு.க.வில் மூத்த தலைவர். தி.மு.க.வில் இருந்தவர் அவர் பேரணி நடத்தியுள்ளார். இது அவர்கள் பிரச்சனை. முதலில் ஸ்டாலின் இதை பார்த்துக் கொள்ளட்டும்" என்றார்.

நாங்களின்றி எதுவும் நடக்காது..
அவர் மேலும் கூறும்போது, "சமீப காலமாக தி.மு.க.வை பா.ஜனதா இயக்குகிறது, அ.தி.மு.க.வை இயக்குகிறது என்று கூறுகிறார்கள்.  அவனின்றி எதுவும் அசையாது என்பது போல, பா.ஜனதா இல்லாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற வகையில் நாங்கள் வளர்ந்து வருகிறோம்" என்று கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close