[X] Close

தெலங்கானா சட்டப்பேரவை கலைப்பு ஏன்?


telangana-cm-kc-rao-meets-governor

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Sep, 2018 14:03 pm
  • அ+ அ-

மக்களிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, முன்கூட்டியே தேர்தலை சந்திக்க ஏதுவாக தெலங்கானா சட்டப்பேரவையை கலைத்துள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ். இது தொடர்பாக இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் ஆளுநர் இ.எல்.நரசிம்மனை சந்தித்து தனது முடிவை தெரிவிக்க அவர் விரைந்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 119 இடங்களில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 63 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இருக்கிறது. இருப்பினும், மக்களிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, முன்கூட்டியே தேர்தலை சந்திக்க தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி முடிவு செய்திருக்கிறது. 
இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றை அக்கட்சி நடத்தியது. அதில் பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ், தெலங்கானா சட்டப்பேரவை கலைப்பு குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று காலை தெலங்கானா அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து தனது முடிவையும் அவர் தெரிவிக்க சென்றிருக்கிறார்.

சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு 100 பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய டி.ஆர்.எஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே தேர்தலுக்கு ஆதரவு..

மேலும், நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆதரவு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நாடுமுழுவதும் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதனால், செலவு குறையும் என்று சட்ட ஆணையம் ஏப்ரல் மாதம் தெரிவித்தது. மேலும், 2019-ம் ஆண்டில் இருந்து இரு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம், இதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரலாம் என ஆலோசனை தெரிவித்தது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close