[X] Close

ஹாட்லீக்ஸ் : வெல்லமண்டி மகனுக்கு வில்லங்க மிரட்டல்!


hot-leaks-vellamandi

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

  • kamadenu
  • Posted: 06 Sep, 2018 09:57 am
  • அ+ அ-

திருச்சியில் ஆவின் பாலகங்களை டெண்டர் எடுப்பதில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தரப்புக்கும் மாவட்டச் செயலாளர் குமார் எம்.பி-யின் தரப்புக்கும் நடந்த குஸ்தி கொலை மிரட்டல் வரைக்கும் போயிருக்கிறது. 

டெண்டரில் ஆதிக்கம் செலுத்திய குமாரின் ஆதரவாளரான ‘ஏர்போர்ட்’ விஜி, வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேருவுக்கு வில்லங்க மிரட்டல் விடுக்குமளவுக்குப் போய்விட்டாராம். 

இதில் சீரியஸான வெல்லமண்டி, இது விஷயமாக போலீஸில் புகார் செய்தார். கூடவே, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகத் தலைமைக்கும் தகவலைக் கசியவிட்டார். 

இதையடுத்து, விஜிக்கு ஏதாவது சிக்கல் என்றால் நமது ‘திறமை’களும் சந்திக்கு வந்துவிடுமே என பதறிய குமார், வெல்லமண்டியிடம் சரண்டர் ஆனார். இதையடுத்து, திருச்சி அதிமுக அலுவலகத்தில் இரு தரப்புக்கும் பஞ்சாயத்து நடந்தது. 

அமைச்சர் தங்கமணிதான் சென்னையில் இருந்தபடியே காணொலி வழி நாட்டாமை செய்தார். முடிவில், வெல்லமண்டி நடராஜனிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார் குமார். 

பஞ்சாயத்து நடந்த சுமார் மூன்று மணி நேரமும் விஜியை வெயிலில் நிற்க வைத்துப் பழிதீர்த்துக்கொண்டது வெல்லமண்டி கோஷ்டி. இதெல்லாம் எங்கு போய் முடியும் என்றுதான் தெரியவில்லை!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close