[X] Close

திமுகவில் அழகிரியால் குடைச்சல் தொடங்கிவிட்டது: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்


minister-kadambur-raju-speech-about-alagiri

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 06 Sep, 2018 08:12 am
  • அ+ அ-

``திமுகவுக்கு அழகிரியால் குடைச்சல் தொடங்கிவிட்டது” என, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட இணைச் செயலாளர் கவுரி, துணைச் செயலாளர்கள் பி.மோகன், தங்கமாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் அமலி டி.ராஜன் வரவேற்றார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ. ராஜூ பேசியதாவது:

அதிமுக இதுவரை பெற்ற வெற்றிகள் அனைத்தும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் கிடைத்தன. இனிமேல் பெறும் வெற்றிதான் நாம் பெறும் வெற்றி. அதிமுக தேர்தலில் தோற்றாலும், நாம்தான் தோற்றோம், மக்கள் தோற்கடிக்கவில்லை என கூறுபவர் ஜெயலலிதா. மக்களை ஒருபோதும் வசைபாடாதவர். தற்போது ஜெயலலிதா வழியில் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திமுகவுக்கு செக் வைத்துள்ளோம். தற்போது, அழகிரியால், திமுகவுக்கு குடைச்சல் தொடங்கி விட்டது. அதிமுக கரை வேட்டியை கட்டிக் கொண்டு ஜெயலலிதா ஆட்சி இருக்கக்கூடாது என்பவர்களை ஆண்டவன் பார்த்துக் கொள்வார். தொண்டர்களுக்கு தேவையானதைச் செய்வோம். தொண்டர்களோடு எப்போதும் நாங்கள் இருப்போம் என்றார் அமைச்சர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close