[X] Close

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடக்குமா? - ஆர்வம் காட்டாத திமுக, பாஜக


thiruparankundram-election

  • kamadenu
  • Posted: 06 Sep, 2018 07:58 am
  • அ+ அ-

 

எஸ்.ஸ்ரீனிவாசகன்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணியில் திமுக, பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் ஆர்வம் காட்ட வில்லை. பொதுத்தேர்தலுடன் இணைந்தே நடக்கும் என்ற எதிர்பார்ப்பால் இந்த நிலை என இக்கட்சியினர் தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ.வாக இருந்த ஏ.கே.போஸ் கடந்த மாதம் 2-ம் தேதி மரணம் அடைந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். 2019-ம் ஆண்டு மே மாதம் மக்களவைத் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இரண்டு மாத இடைவெளியில் சட்டப் பேரவைக்கு தனியாக தேர்தல் அவசியமா, இல்லையா என்ற கேள்விக்கு விடைதெரியாமல் பல கட்சிகள் குழப்பத்தில் உள்ளன.

தங்கள் கட்சியின் எதிர்காலம், வளர்ச்சிக்கு நல்லதாக அமையும் எனக் கருதும் கட்சிகளே இத்தேர்தலை ஆவலுடன் எதிர் பார்க்கின்றன. இடைத்தேர்தல் சோதனையில் சிக்கி தோல்வி, டெபாசிட் பறிபோகும் சூழல், வாக்கு வங்கியில் பெரும் சரிவு என்ற நிலையை சந்தித்தால், கட்சியின் எதிர்காலமே பறிபோய்விடும் என்ற அச்சத்தில் உள்ள கட்சிகள் தேர்தல் வந்துவிடக்கூடாது எனக் கருதுகின்றன.

தற்போதைய சூழலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அமமுக மட்டுமே தேர்தல் பணியை முதலில் தொடங்கி உள்ளது. இக்கட்சிக்கு உறுப்பினர் சேர்ப்பு பணி மாநிலம் முழுவதும் நடக்கிறது. இப்பணியை திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் பணியாக மாற்றிவிட்டனர் இக்கட்சியினர். இக்கட்சி சார்பில் வேட்பாளர் முக்கியமல்ல. கட்சியின் செல்வாக் கை காட்ட மட்டுமே முயற்சி நடக்கிறது.

தேர்தல் பணியில் அதிமுக நிர்வாகிகளின் குடும்பத்தினரே பரவலாக ஈடுபட்டுள்ளனர். இத னால் அதிமுகவில் எழுந்த சலசலப்பைக் கட்டுப்படுத்த பெயரளவில் தேர்தல் பணி நடக்கிறது. இங்கு வேட்பாளர் யார், அவர் எந்த அணியை சேர்ந்தவர், செலவு யார் செய்வது, மேலிடத்தில் இருந்து உத்தரவு வரட்டும் என்ற நிலையிலேயே அதிமுக செயல்பாடு உள்ளது.

இதனால் நலத்திட்ட உதவி, அரசு திட்டப் பணிகள் நிறைவேற்றம் என சில பணிகள் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. தேதி அறிவித்ததும் பணிகள் முறையாக நடக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துவிட்டதால், அதற்கான சூழலை எதிர்பார்த்துள்ளனர். தங்கள் ஆதரவாளரை வேட்பா ளராக்கும் முயற்சி மட்டுமே நடக் கிறது.

திமுக இதுவரை எந்த பணியையும் மேற்கொள்ள வில் லை. இது குறித்து இக்கட் சியின் மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி மருத்துவமனையில் சேர்ந்தது முதல் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றவரை கட்சித் தலைமைக்குப் பணிகள் அதிகம் இருந்தன. இதனால் இடைத்தேர்தல் குறித்த சிந் தனையே இல்லை. 8-ம் தேதி நடக்க உள்ள மாவட்டச் செயலர் கூட்டத்தில் இடைத்தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.

கடந்த தேர்தலில் தோல்வி ஏன் என்பது குறித்த அறிக்கையை தலைமை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. பொதுத்தேர்தலுடன் மட்டுமே நடக்கும் என்பதால் ஆர்வம் காட்டவில்லை என்றார்.

பாஜக மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பே இல்லை. அப்படியே தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்தாலும், பொதுத்தேர்தல் வரும் நிலையில் இடைத்தேர்தல் அவசியமில்லை என்ற காரணத்தைக் கூறி வழக்கு போட்டு நிறுத்தவே வாய்ப்பு அதிகம். மேலும் இத்தேர்தல் முடிவு பொதுத்தேர்தலில் தாக் கத்தை ஏற்படுத்தும் என்பதால் தேவையற்றது என்பது எங்களின் கருத்து. இதனால் இடைத்தேர்தல் குறித்து நாங்கள் கவலைப்படவே இல்லை. இதையும் தாண்டி நடந்தால், சந்திக்கவும் தயாராக உள்ளோம் என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close