[X] Close

நீங்கள் அமெரிக்காவுக்கு செல்லலாமா?- பினராயி விஜயனை விமர்சித்த தமிழிசை


tamilisai-slams-pinarayi-vijayan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Sep, 2018 16:18 pm
  • அ+ அ-

கேரள முதல்வர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளதை விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவியும் சென்றுள்ளார். அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கியிருந்து முதல்வர் சிகிச்சை பெறுகிறார்.

இந்நிலையில், அவர் அமெரிக்கா சென்றுள்ளது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கேரள முதல்வர் தன் உடல்நலம் பேண அமெரிக்காவில் மருத்துவபரிசோதனை? கம்யூனிஸ்டுகள்? அமெரிக்க ஏகாதிபத்திய  நாட்டில் சிகிச்சை. மோடியின் வெளிநாட்டுப்பயணம் அவர் கோட், சட்டை, காலணிகளை விமர்சனம் செய்த நீங்கள் அமெரிக்காவில் நலம் பெற வாழ்த்துக்கள்" என கிண்டலாக ட்வீட் செய்திருக்கிறார்.

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களை அதிகமாக விமர்சித்தவர்கள் இடதுசாரிகள் தான். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், பினராயியின் அமெரிக்கப் பயணத்தை தமிழிசை விமர்சித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close