[X] Close

ஹாட்லீக்ஸ் : தமிழக காங்கிரஸ் தலைவர் கார்த்தி சிதம்பரம்?


hot-leaks-chidambaram

கார்த்தி சிதம்பரம்

  • kamadenu
  • Posted: 11 Aug, 2018 12:45 pm
  • அ+ அ-

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சமீபத்தில் டெல்லியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது அவர் தனது ஆதரவு மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட சிலரையும் உடன் அழைத்துச் சென்றார். 

இந்த விவகாரம் வில்லங்கமாகி, அரசவைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோஷம் டெல்லியில் உரக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், கடந்த வாரம் ராகுல் காந்தியின் இல்லத்தில் நடந்த முக்கிய நிர்வாகிகள் சந்திப்பின்போது, “தலைவர் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்று ப.சிதம்பரத்திடம் கேட்டார்களாம். 

அப்போது அமைதியாக இருந்த சிதம்பரம், மாலையில் தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், “எனக்குப் பதிலாக கார்த்தி சிதம்பரத்தைத் தலைவராக்கினால் கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்சலாம்” என்றாராம். 

ஆனால், கார்த்தியை தலைவராக்குவதற்கு திருநாவுக்கரசரே பெட்டர் என்ற முடிவுக்கு வந்த முக்கிய நிர்வாகிகள், மவுனமாகவே இருந்து விட்டார்களாம்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close