[X] Close

ராமேஸ்வரம் கோயிலில் கருணாநிதிக்காக மோட்ச தீபம்


rameswaram-motcha-deepam

ராமேஸ்வரம் கோயிலில் மோட்சதீபம் ஏற்றப்பட்ட காட்சி.

  • kamadenu
  • Posted: 10 Aug, 2018 10:23 am
  • அ+ அ-

எஸ். முஹம்மது ராஃபி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வியாழக்கிழமை மாலை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி  உயிர் விடுதலை பெற்று  வானுலகம் சென்று  நல்ல கதி கிடைப்பதற்காக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் திமுக தொழிற்சங்கத்தினர் சார்பாக வியாழக்கிழமை மாலை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திமுக தொழிற்சங்க நிர்வாகிகள், ராமநாதசுவாமி கோயில் ஊழியர்கள், குருக்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ஏராளமாகக் கலந்து கொண்டனர்.

மேலும் ராமேஸ்வரத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பாக கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் கூட்டங்களும் நடைபெற்றன. 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close