[X] Close

கருணாநிதியின் குறும்புக் கடிதம்!


kalaingar-thennan

  • வி.ராம்ஜி
  • Posted: 08 Aug, 2018 14:38 pm
  • அ+ அ-

திருவாரூர் மண்ணில் பிறந்த கலைஞர் கருணாநிதிக்கு, அங்கே பால்ய நண்பர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் தென்னன். இளம் வயதில் இருந்தே மனம் விட்டுப் பேசி மகிழக்கூடியவர்கள் அவர்கள்.

1945ம் ஆண்டில்... அதாவது 21வது வயதில்... தந்தை பெரியாரின் குடியரசு இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தார் கலைஞர். அப்போது தன் பால்ய நண்பர் தென்னனுக்கு ஈரோட்டில் இருந்து கடிதம் ஒன்று எழுதினார்.

அந்தக் கடிதத்தை எப்போதும் போல எழுதாமல், அதில் குறும்பும் கேலியுமாக எழுதியிருந்தார் கலைஞர். அதாவது ஒரு வட்டத்துக்குள் ஆரம்பித்து முடிகிற மாதிரி கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தில், ’தோழர் தென்னன் அவர்களே. வணக்கம். தங்கள் உடல்நலத்தை அறிய ஆவல். சி.டி.எம். கடிதத்தில் விளக்கம் காணவும். 9.12.45 குற்றாலம் உண்டா என்பதை எழுதவும். எப்போதும் போல் அலட்சியம் வேண்டாம். ராமநாத அண்ணனுக்கும் எல்.எஸ்.பி. யாகூப்பிற்கும் வணக்கம் கூறவும்.

எல்லாவற்றுக்கும் பதில். வீட்டைப் பார்த்துக்கொள்ளவும். டி.பி.ஆர்? -மு.க. அன்பு!’ என்று கடிதத்தில் எழுதியிருக்கிறார் கலைஞர்!

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close