[X] Close

அப்பா என்று ஒருமுறை கூப்பிடட்டுமா தலைவரே!  -மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் உருக்கம்


stalin-appa

  • வி.ராம்ஜி
  • Posted: 08 Aug, 2018 01:25 am
  • அ+ அ-

அப்பா அப்பா என்று அழைத்ததை விட தலைவரே தலைவரே என்று அழைத்ததுதான் அதிகம். ஒருமுறை அப்பா என்று கூப்பிடட்டுமா தலைவரே என்று திமுக செயல்தலைவரும் கலைஞரின் மகனுமான மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தன் கைப்பட எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். 
அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் எழுதியிருப்பதாவது: 
எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் என் ஆருயிர்த் தலைவர் இப்போது சொல்லாமல் சென்றுவிட்டீர்களே. எங்களையெல்லாம் ஏங்க வைத்துவிட்டு எங்கே சென்றீர்கள். எம் உடலில், ரத்தத்தில், சிந்தனையில், இதயத்தில் இரண்டறக் கலந்துவிட்ட நீங்கள், எங்களையெல்லாம் ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்?
’ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்று நினைவிடத்தில் எழுதவேண்டும் என 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள். இந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன் புறப்பட்டுவிட்டீர்களா/ 
95 வயதில், 80 ஆண்டு பொதுவாழ்வுடன் சளைக்காமல் ஓடி,’நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம் என்று போட்டி வைத்துவிட்டு காத்திருக்கிறீர்களா? 
திருவாரூர் மண்ணில் உங்கள் 95ம் பிறந்தநாளாம் சூன் 3ம் நாள் நான் பேசும் போது, ’உங்கள் சக்தியில் பாதியைத் தாருங்கள் ’என்றேன். அந்த சக்தியையும் பேரரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற இதயத்தையும் யாசிக்கிறேன். தருவீர்களா தலைவரே!
அந்தக் கொடையோடு நிறைவேறாத உங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் வென்றுகாட்டுவோம்! 
கோடானுகோடி உடன்பிறப்புகளின் இதயத்திலிருந்து ஒரு வேண்டுகோள்... ஒரே ஒரு முறை... ’என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...’என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு இயங்கவைத்திடுமே! 
’அப்பா அப்பா என்பதை விட தலைவரே தலைவரே என உச்சரித்ததுதான் என் வாழ்வில் அதிகம். அதனால் ஒரே ஒரு முறை, இப்போது அப்பா என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே! 
இவ்வாறு ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close