[X] Close
 

ஆர்.கே.நகரில் தினகரன் ஜெயித்தது எப்படி? விரைவில் சொல்லுவேன்! - திவாகரன்


dhivakaran

திவாகரன் - தினகரன்

  • வி.ராம்ஜி
  • Posted: 06 Aug, 2018 17:04 pm
  • அ+ அ-

 ஆர்.கே.நகரில் தினகரன் ஜெயித்தது எப்படி என்பதை விரைவில் சொல்லுவேன் என திவாகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்ததாவது:

இன்று (6ம் தேதி) மன்னார்குடியில் தினகரன் அணியினர் கூட்டம் போடுகிறார்கள். அதற்காக மன்னார்குடிப் பகுதியில் நிறைய பேருக்கு டோக்கன் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த டோக்கன் எதற்கு என்றால், டோக்கன் இருப்பவர்களுக்கு குக்கர் தரப்போகிறார்களாம். இதனால் மதியமே ஏராளமான பெண்கள் கூட்டம் நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டார்கள்.

அரசியலிலும் சரி, தேர்தலிலும் சரி, இப்படிப்பட்ட பணப்பரிமாற்றம் நடக்காமல் இருக்கவும் பணப் பரிபாலனம் ஒழிப்பதற்காகவும் அவற்றையெல்லாம் படிப்படியாக ஒழிக்கவேண்டும் என்பதற்காகவும் செயல்பட்டுக்கொண்டிருப்பதுதான் எங்கள் லட்சியம். அதுதான் எங்களின் கொள்கை. ஆனால் இங்கே, மன்னார்குடியில் நடைபெறும் கூட்டத்துக்காக, திண்டுக்கல்லில் இருந்தெல்லாம் மக்களை அழைத்து வந்திருக்கிறார்கள்.

ஆர்.கே.நகரில் தினகரன் எப்படி ஜெயித்தார் என்பது தனி எபிஸோடு. அதை விவரமாகச் சொல்ல இப்போது நேரமில்லை. விரைவில் அந்த ரகசியங்களைச் சொல்லுவேன்.

நான் தேர்தலில் நிற்பேனா என்று பலரும் கேட்கிறார்கள். எப்போதும் தேர்தலில் நிற்கமாட்டேன் என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். அதில் எனக்கு விருப்பமும் இல்லை. கட்சியை நடத்திச் செல்வதுதான் நோக்கம். வேறு எதுவும் இல்லை.

இவ்வாறு திவாகரன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close