[X] Close

மீண்டும் இடைத்தேர்தலுக்குத் தயாராகும் திருப்பரங்குன்றம் தொகுதி


thirupurakundram-constituency-to-have-by-election-again

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Aug, 2018 11:13 am
  • அ+ அ-

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கும் அவ்வளவு பொருத்தமாகிவிட்டது. அதிமுக எம்.எல்.ஏ.,வான ஏ.கே.போஸ் இன்று காலை மாரடைப்பால் (ஜூலை 2) மரணமடைந்தார். இதனையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சீனிவால் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்பதற்கு முன்னதாகவே இறந்ததால் இடைத்தேர்தல் நடந்தது. இந்நிலையில் மூன்று ஆண்டுகளில் இத்தொகுதியில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியிருக்கிறது.

பதவி ஏற்காமலேயே இறந்த சீனிவேல்..
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சீனிவேல் வெற்றி பெற்றார். ஆனால், பதவியேற்பதற்கு முன்னதாகவே அவர் உடல்நல பாதிப்பால் காலமானார். எனவே அந்தத் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவர் 55.65% வாக்கு பெற்று வெற்றி பெற்றார். ஏ.கே.போஸ் ஏற்கெனவே 2006 தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக 7 முறையும் திமுக 2 முறையும் தேமுதிக ஒரு முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. 2011 தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஏ.கே.ராஜா இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி அறிவோம்:
மதுரை தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதியில் திருப்பரங்குன்றம், விளாச்சேரி, வடிவேல்கரை, தட்டானூர், கிழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கரடிபட்டி, வடபழஞ்சி, தென்பழஞ்சி, சக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம், தோப்பூர், தனக்கன்குளம், சிந்தாமணி, பிராகுடி, கல்லம்பல், ஐராவதநல்லூர், விரகனூர், புளியங்குளம், சிலைமான், பனைபூர், சாமநத்தம், செட்டிகுளம், பெருமானேந்தல், கூடல்செங்குளம், பெருங்குடி, முல்லாகுளம், வாலானேந்தல், நிலைபூர், பெரிய ஆலங்குளம், சூரக்குளம், வலையப்பட்டி, தொட்டியபட்டி, வலையங்குளம், பாப்பானோடை, இராமன்குளம், குதிரைகுத்தி, குசவன்குண்டு, குசவபட்டி, விராதனூர், மூத்தான்குளம், பனைக்குளம், சோளங்குருணி, எலியார்பதி, நெடுமதுரை, கொடும்பாடி, ஓத்தைஆலங்குளம், பெரியகூடக்கோயி, பாரைபதி, நல்லூர் மற்றும் நெடுங்குளம் கிராமங்கள் அடங்கும்.
சின்ன அனுப்பானடி (சென்சஸ் டவுன்), அவனியாபுரம் (பேரூராட்சி), திருப்பரங்குன்றம் (பேரூராட்சி), ஹார்விபட்டி (பேரூராட்சி) மற்றும் திருநகர் (பேரூராட்சி) ஆகிய பகுதிகளும் இத்தொகுதியில் அடங்கும்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close