[X] Close
 

பப்பு என்று கூப்பிட்டாலும் உங்களை வெறுப்பதற்கில்லை: ராகுலின் முதிர்ச்சியான உரை


you-may-call-me-pappu-i-don-t-hate-you-rahul-gandhi-hugs-pm-modi

  • பாரதி
  • Posted: 20 Jul, 2018 14:41 pm
  • அ+ அ-

ராகுல் காந்தியை பப்பு வகையறா கலாய்ப்புகள் இனி எப்போதுமே கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் இன்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் முதிர்ச்சியும் அவரது உடல் மொழியின் வலிமையும் கடைசியாக அவர் பிரதமரை ஆரத் தழுவி அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்திய விதமும் அப்படி.

பப்பு என்ற விமர்சனப் பெயர் ராகுலைத் தொற்றிக் கொண்டது 2014-ல்தான். ஒரு முறை பிரதமர் மோடி பேசும்போது ராகுலை பச்சா (சிறுவன்) என விமர்சித்தார். அதன் பின்னரே பப்பு என்ற விமர்சனப் பெயர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
சில பாஜக ஆதரவு ஊடகங்களால் அது பிரபலப்படுத்தப்பட்டது. ட்ரோல்களாலும் மீம்ஸ்களாலும் அந்தப் பெயர் நிலை நிறுத்தப்பட்டது.

ஆனால், 4 ஆண்டு காலமாக துரத்தி வந்த பெயரை ஒரே உரையில் உடைத்தெரிந்திருக்கிறார் ராகுல் காந்தி. 
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றிய ராகுல் பிரதமர் மோடியை நேருக்கு நேர் விளாசினார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு தேர்தல் களத்துக்கு மிகப் பெரிய அடித்தளமாக அமைந்திருக்கிறது.
மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள், பாதுகாப்பு அமைச்சகத்தின் ரஃபேல்ஸ் விமான ஒப்பந்தம், பொருளாதார நிலை, பெண்கள் பாதுகாப்பு என பல கோணங்களில் தனது பேச்சை இட்டுச் சென்று பிரதமரை முகத்துக்கு நேராகவே "நீங்கள் எனது கண்களை நேரடியாகப் பார்த்துப் பேசுவதை" தவிர்க்கிறீர்கள் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மோடியின் உடல் மொழியில் நிச்சயமாக ஒரு பதற்றம் நிலவியது. அந்தப் பதற்றத்தை தணிக்கும் வகையிலோ என்னவோ உரையை முடிக்கும்போது "நீங்கள் என்னை பப்பு என்று அழைத்தாலும்கூட துளி அளவேனும் நான் வெறுக்கமாட்டேன். உங்களுக்குள் இருக்கும் வெறுப்பை அகற்றிவிட்டு அன்பை விதைப்பேன்" என்று கூறி பிரதமரைக் கட்டியணைத்தார். அவரது இந்த செயல் பாராட்டுகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. 

இணையம் முழுவதும் ராகுல் காற்றுதான் வீசுகிறது. இந்தத் தென்றலில் மோடி அலை ஓய்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வேங்கை மகன், ஹீரோ ஆஃப் தி டே என்றெல்லாம் ராகுலை பாராட்டி வருகின்றனர்.

 

இதையும் படியுங்கள்: இனியும் அவரை பப்பு என்று கூப்பிடாதீர்கள்!

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close