[X] Close
 

ட்விட்டரில் முந்திய #WelcomeStalin: தோற்றுப்போன ட்ரோல் வியூகம்


gobackstalin-welcomestalin-in-twitter-trends

  • பாரதி
  • Posted: 17 Jul, 2018 15:42 pm
  • அ+ அ-

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும் திமுக பிரமுகர்களில் முக்கியமானவருமான மா.சுப்பிரமணியம் தலைமையில் #GoBackModi என்று எழுதப்பட்ட திராவிட பலூன் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி சைதாப்பேட்டையில் உயரப் பறந்தது. அழுத்தமான கறுப்பு நிறத்தில் #GoBackModi என்று பிரம்மாண்டமாகப் பறந்த அந்த பலூனை ஏ.பி., போன்ற வெளிநாட்டு ஊடக ஃபோட்டோகிராஃபர்கள்கூட கிளிக்கிச் சென்றனர். 

அன்றைய தினம் சென்னையில் அப்படி ஒரு எதிர்ப்பை எதிர்பாராத பிரதமர் மோடி ஆளுநர் மாளிகையிலிருந்து ஐஐடி வளாகத்துக்கு அவசரமாக பாதையமைத்து செல்ல வேண்டியதாயிற்று. அதையொட்டி மீம்ஸ்கள் குவிந்தது தனி அத்தியாயம்.

அப்படி பிரதமரையே பம்ம வைத்த சம்பவத்தினால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி அவர்களுக்கு இன்னமும் இருக்காதா என்ன? ஆனால், அந்த ஆற்றாமை அவர்களுக்கு அடங்குவதற்குள்ளாகவே அண்மையில் சென்னை வந்த அமித் ஷாவுக்கு #GoBackAmitShah என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி தமிழக அளவிலும் இந்திய அளவிலும் மூன்றாவது இடத்தில் ட்ரெண்டாகச் செய்தனர்.

இந்த இரண்டு சம்பவங்களும் சமூகவலைதளங்களின் மாஸ்டர்கள் என்று தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் பாஜக ஆதரவாளர்களுக்கு சறுக்கல்தான். நெட்டில் பழிவாங்க சரியான தருணத்துகாக காத்திருந்த அவர்களுக்கு தோதாக அமைந்தது வெளிநாடு சென்றுவிட்டு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தாயகம் திரும்புவது. வாய்ப்பை விடுவார்களா உடனே #GoBackStalin என்ற ஹேஷ்டேக் மூலம் ட்ரோல் செய்யத் தொடங்கினர்.
இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் விறுவிறு என்று டாப் 10 ஸ்லாட் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்க களத்தில் இறங்கிய திமுக ஆதரவாளர்கள் #WelcomeStalin- னை களமிறக்கினர். சில மணி நேரத்தில் பாஜக ஆதரவாளர்கள் ட்ரோல் வியூகத்தை முறியடித்த  #WelcomeStalin 3-வது இடத்துக்கு முன்னேறியது.

இந்த ஹேஷ்டேக் கீழ் பலரும் சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

அப்படி ஒரு ட்விட்டராட்டி (Josheba) "பாஜக ஏதேனும் ஒரு கட்சியின் சித்தாந்தத்தை விரும்பவில்லை வெறுக்கிறது என்றால் அந்த சித்தாந்தம் நிச்சயமாக மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்! பாஜகவால் வெறுக்கப்படும் ஒருவர் அல்லது ஒரு கட்சி நிச்சயமாக தமிழ் மக்களின் அன்பைப் பெறும். எனவே, வரவேற்கிறோன் ஸ்டாலினை. புறந்தள்ளுகிறோம் சங்கிகளை!" எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close