[X] Close

சாதி ஒழிந்துவிடுமா மிஸ்டர் கமல்?- நெட்டிசன்கள் கேள்வி


netizens-slam-kamal-hasan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Jun, 2018 17:37 pm
  • அ+ அ-

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் இன்றைய ட்வீட் விவாதப் பொருளாகியிருக்கிறது. இனி ட்விட்டர் அரசியல் எல்லாம் இல்லை இதோ கட்சி ஆரம்பித்துவிட்டேன் என்று பிரகடனப்படுத்திய பின்னரும்கூட அடிக்கடி ட்வீட் செய்துகொண்டுதான் இருக்கிறார் கமல்ஹாசன்.

இன்றைய ஸ்பெஷன் 'சாதி ஒழிப்பு' ட்வீட்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது சாதி, மதம் பதிவு செய்ய மறுத்துவிட்டேன். இப்படித்தான் சாதி அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்பதால் சாதி மதத்தை பதிவுசெய்யவில்லை. ஒவ்வொரு தனிமனிதரும் முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். கேரள மாநிலம் இதைக் கடைபிடிக்கிறது. சாதி, மதத்தை பள்ளிச் சான்றிதழ்களில் குறிப்பிடாமல் இருப்பவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த ட்வீட்டுக்கு சிலர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும் இது இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான பார்வை என்று பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

நெட்டிசன்களின் கருத்துகள் சில..

விபினேஷ்:
முகத்த பாத்து, பேர பாத்து, கும்புட்ற சாமி பாத்தே சாதி கண்டுபிடிக்கிற ஊர்ல சான்றிதழ ஒழிச்சிட்டா சாதி ஒழியும்னு எப்டி நம்புறீங்க?
சமூகத்துல சமமான நிலை எட்டினால் தான் சாதி ஒழியும் அதுக்கு இடஒதுக்கீடும் சாதி சான்றிதழும் அவசியம்... சமூகநீதிய சரியா புரிஞ்சிகிட்டு அரசியலுக்கு வரவும்...
 
பள்ளியிலும் கல்லூரியிலும் இடம் கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா?
சமூகத்தில் இடம் கிடைக்க வில்லையே? இன்றைக்கும் ஜனாதிபதியே கோயிலுக்கு வெளியில தான் நிற்கிறார்..!
தலீத்கள் முன்னேறும் வரை பொறுத்துதான் ஆகணும்.. 
அவசரப்பட்டா முடியுமா?
நீங்க இடஒதுக்கீடுனு தர்ரது பிச்சை இல்லை..நிவாரணம்

அம்பேத்கர் சட்டம் இயக்கம்

முகத்த பாத்து, பேர பாத்து, கும்புட்ற சாமி பாத்தே சாதி கண்டுபிடிக்கிற ஊர்ல சான்றிதழ ஒழிச்சிட்டா சாதி ஒழியும்னு எப்டி நம்புறீங்க?
சமூகத்துல சமமான நிலை எட்டினால் தான் சாதி ஒழியும் அதுக்கு இடஒதுக்கீடும் சாதி சான்றிதழும் அவசியம்... சமூகநீதிய சரியா புரிஞ்சிகிட்டு அரசியலுக்கு வரவும்...

முரளிதரன் காசி விஸ்வநாதன்

ஆக, பள்ளிக்கூடத்தில் ஜாதி இல்லையென்றால் சமூகத்தில் ஜாதியே இல்லாமல் போய்விடும்.. ? சூப்பர். 
அதுக்கப்புறமா, யாரும் ஜாதி பார்த்து கல்யாணம் பண்ண மாட்டாங்க - ஏன்னா பள்ளிக்கூட சான்றிதழில் ஜாதி இல்லாததால யாருக்கும் யார் ஜாதியும் தெரியாது. அப்புறமா, கோவிலில் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகிவிடலாம்.. அப்புறம் அப்படியே நைஸா இட ஒதுக்கீட்டைத் தூக்கிறலாம்.. ஏன்னா ஜாதிதான் இல்லையே..

இவ்வாறு கமலுக்கு பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close