[X] Close

சித்தராமையாவும் சர்ச்சை வீடியோக்களும்!- தாங்குமா கூட்டணி?


video-of-siddaramaiah-expressing-doubts-about-longevity-of-the-coalition-govt-surfaces

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Jun, 2018 16:19 pm
  • அ+ அ-

79 தொகுதிகளைக் கைப்பற்றியும்கூட காங்கிரஸ் கர்நாடகா முதல்வர் பதவியை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு விட்டுக்கொடுத்து கூட்டணி அரசை அமைத்துள்ளது. ஆட்சி பாஜகவின் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது என்பதுதான் இதன் ஒரே பின்னணி.

இந்நிலையில், 36 இடங்களை மட்டுமே வென்று முதல்வரான குமாரசாமி முழு பட்ஜெட் தாக்கல் செய்வேன் என்று கூறியிருப்பது சித்தராமையாவை அதிருப்தி அடையச் செய்திருக்கிறது. கூட்டணிக்குள் சலசலப்பு இருக்கிறது. இதைத்தான் அவரது இரண்டு வீடியோக்களும் உணர்த்துகின்றன.

முதல் வீடியோவில் சித்தராமையா பட்ஜெட் தாக்கல் குறித்து விமர்சனம் செய்திருந்தார். துணை நிதிநிலை அறிக்கை போதாதா என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த வீடியோ ஏற்படுத்திய சர்ச்சை அடங்குவதற்குள்ளதாகவே மற்றொரு வீடியோவும் வெளியாகியிருக்கிறது. சித்தராமையா பேசுவது ரகசிய கேமரா மூலம் படமாக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் சித்தராமையா, "காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி 2019 மக்களவை தேர்தல் வரை நீடிக்கும். அதன் பின்னர் அரசியல் சூழல் பொருத்தே கூட்டணி அமையும். அடுத்த மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் நரேந்திர மோடியால் நிச்சயம் வெற்றி பெற இயலாது" எனக் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருக்கும் சித்தரமையாவின் இந்த கருத்துகள் கூட்டணி ஆட்டம் கண்டிருப்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. இது குறித்து துணை முதல்வர் பரமேஸ்வரா சப்பைக் கட்டு கட்டினாலும்கூட சிக்கல் தெளிவாகத் தெரிகிறது.

முதிர்ச்சியான அனுகுமுறை:
கூட்டணியில் இப்படி சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில், தேவேகவுடா ஒரு பேட்டியில் "இப்படியான சச்சரவுகள் கூட்டணி அரசின் ஆரம்ப காலத்தில் ஏற்படத்தான் செய்யும். நடப்பு சூழலில் இரண்டு கட்சிகளுமே அரசை சமுகமாக நடத்துவதை நோக்கியும் மதச்சார்புடைய கட்சிகளை விலக்கி வைப்பதிலுமே கவனம் செலுத்த வேண்டும்" என அரசியல் முதிர்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

ஜூலை 5-ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் சித்தராமையாவின் பேச்சால் கூட்டணி தாங்குமா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close