[X] Close

பிரணாப் வருகைக்குப் பின் உறுப்பினர் சேர்க்கை அதிகரிப்பு!- மார்தட்டிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்


pranab-s-visit-boosted-membership-rss

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Jun, 2018 16:59 pm
  • அ+ அ-

பிரணாப் வருகைக்குப் பின் ஆர்.எஸ்.எஸ்.,ஸில் சேர ஆர்வம் அதிகரித்துள்ளதாக அந்த இயக்கம் தெரிவித்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அண்மையில் சென்றிருந்தார்.

இந்நிலையில், தலைமையகத்துக்கு பிரணாப் வந்து சென்ற பிறகு தங்கள் அமைப்பில் சேரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருவதாகக் கூறியிருக்கிறது மேற்குவங்க பிராந்திய ஆர்.எஸ்.எஸ்.

தெற்கு வங்காள பிராந்தியத்தின் ஆர்.எஸ்.எஸ்., பிரச்சார பிரமுகர் பிப்லப் ரே, "பிரணாப் வருகைக்கு முன்னர் ஆன்லைன் வாயிலாக ஒவ்வொரு நாளும் சுமார் 400 பேர் எங்கள் இயக்கத்தில் இணைந்துவந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. ஜூன் 7-ம் தேதி பிரணாப் வந்து சென்ற பின்னர் எங்கள் இயக்கத்தில் இணைய அன்றாடம் 1100 முதல் 1200 பேர் விண்ணப்பிக்கின்றனர்" என்றார்.

இதை மேற்குவங்க ஆர்.எஸ்.எஸ்., மாநிலச் செயலாளர் ஜிஷ்னு பாசுவும் உறுதி செய்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் நாக்பூரில் கடந்த 7-ம் தேதி பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பேசியதன் கருத்து ஒன்றே என்றும் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close