[X] Close
 

மோடியின் அட்வைஸும் மூடாத பாஜகவினரின் வாய்களும்...


prostitutes-better-than-government-officials-bjp-lawmaker-s-shocker

  • பாரதி
  • Posted: 06 Jun, 2018 13:34 pm
  • அ+ அ-

"பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகக் கருதி ஏதாவது பேசி.. அதையும் தவறாகப் பேசி மீடியாக்களுக்கு மசாலா கொடுக்காதீர்கள்..." பாஜக அமைச்சர்கள், எம்.பி.,க்கள்,  எம்.எல்.ஏ.,க்கள், தேசிய பொதுச் செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள் என ஒட்டுமொத்த முக்கியப் பிரமுகர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டார் பிரதமர் மோடி. 
காரணம் இவர்களில் யார் என்ன கருத்து சொன்னாலும் சமூக வலைதளங்களில் மோடி படத்தை பிரதானப்படுத்திதான் மீம்ஸ் வெளியாகும். ஆனால் இந்த அட்வைஸை சற்றும் மதிப்பதாக இல்லை பாஜகவினர். 

மகாபாரத காலத்திலேயே செயற்கைக்கோள் இருந்தது, இதழியல் இருந்தது, சீதாதேவி டெஸ்ட் ட்யூப் குழந்தை என நாள் தவறாமல் பாஜகவினர் கருத்துகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்க அதை வைத்து சமூக வலைதளங்களில் பாஜகவை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.

இதோ இன்றைய ஸ்பெஷலாக உத்தரப் பிரதேச எம்.எல்.ஏ., ஒருவர் பேசியிருக்கிறார்.
உ.பி., பாஜக எம்.எல்.ஏ., சுரேந்திரா சிங் ஒரு பொதுவெளியில் பேசும்போது, "நமது அரசு அதிகாரிகளைவிட பாலியல் தொழிலாளர்களே மேல். அவர்களாவது பணத்தை வாங்கிக் கொண்டு வேலையைச் செய்கிறார்கள். ஆனால், இந்த அதிகாரிகளோ பணத்தையும் பெற்றுக் கொண்டு வேலையையும் செய்வதில்லை. அந்த வேலை முடிக்கப்படும் என்ற உத்தரவாதமும் இல்லை" எனப் பேசினார்.

இவர் இன்றுதான் இப்படிப் பேசியிருக்கிறார் என நினைக்காதீர்கள். எப்போதுமே இப்படித்தான். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என அழைத்தவரும் இவர்தான் மூன்று குழந்தைகளைப் பெற்ற பெண்ணை யாராலும் பலாத்காரம் செய்ய முடியாது என்று கருத்து கூறியவரும் இவர்தான்.
திரிபுரா முதல்வர் பிப்லப் தேப், உ.பி., துணை முதல்வர் தினேஷ் சர்மா பட்டியலில் சுரேந்திரா சிங்கையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மோடியின் அட்வைஸை மதிக்காமல் பேசும் பாஜகவினர் என்றுமே சமூக வலைதளங்களுக்கு சரியான தீணிதான்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close