[X] Close

ஒன் மேன் ஷோ, டூ மேன் ஆர்மி: பிரதமர், அமித் ஷாவை விளாசிய சத்ருகன் சின்ஹா


modi-government-is-a-one-man-show-and-bjp-is-a-two-man-army

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 May, 2018 10:56 am
  • அ+ அ-

மோடி அரசு ஒன் மேன் ஷோ அரசாங்கமாகவும் பாரதிய ஜனதா கட்சி டூ மேன் ஆர்மியாகவும் இருப்பதாகவும் பாஜக எம்.பி., சத்ருஹன் சின்ஹா விமர்சித்திருக்கிறார். சத்ருஹன் சின்ஹா.

சொந்தக் கட்சியையே பல்வேறு கோணங்களில் கடுமையாக விமர்சித்து வருபவர் சத்ருகன் சின்ஹா. அந்த வகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர் மோடியையும் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்தார்.

சண்டிகரில் விவசாய நிலங்களில் மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாகக் கலந்து கொண்ட சத்ருகன் சின்ஹா, "நான் பாஜகவில் சேரும்போது கட்சி எப்படி இருந்ததோ இப்போது அப்படி கட்சி இல்லை. கட்சிக்குள் சுதந்திரம் பறிபோய்விட்டது. நான் கட்சியின் பலவீனங்களை சுட்டிக் காட்டுவதால் கட்சிக்கும் விரோதமாக செயல்படுகிறேன் என அர்த்தமில்லை. அதேபோல் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிப்பதால் கட்சியை விட்டு விலகப்போகிறேன் என்றும் அர்த்தமில்லை. ஒருவேளை கட்சி என்னை தூக்கி எறிந்தாலும் கட்சிக்கும் எதிராக செயல்பட மாட்டேன்.

இன்று 80% அமைச்சர்களை மக்களுக்கு யார் என்றே தெரியவில்லை. அமைச்சர்களின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்துவிட்டது. அப்படியே அவர்கள் பெயர் தெரிந்தாலும் அவர்களால் எந்த நன்மையும் இல்லை என்ற மனநிலையில்தான் மக்கள் இருக்கின்றனர்.

மக்கள், நாட்டில் எவ்வித முன்னேற்றமும் நடைபெறவில்லை என்றே நம்புகின்றனர். பேச்சுகளும், அலங்கார கோஷங்களுமே இருப்பதாக உணர்கின்றனர். இவற்றிற்கான விலையை நாம் ஏற்கெனவே கொடுத்துவிட்டோம். 
மோடி அரசு ஒன் மேன் ஷோ அரசாங்கமாகவும் பாரதிய ஜனதா கட்சி டூ மேன் ஆர்மியாகவும் இருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த மக்களுக்குமே தெரிகிறது. 
கட்சியும், அரசாங்கமும் கூட்டாக செயல்பட வேண்டும். முடிவுகளை இணைந்து எடுக்க வேண்டும்" என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close