[X] Close

பறக்கும்படையினர் அதிரடி சோதனை; தமிழகத்தில் இதுவரை ரூ.14 கோடி பறிமுதல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்


lok-sabha-elections

  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 07:39 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் நடை பெறுவதை முன்னிட்டு, தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தநிலையில், நிலை கண்காணிப்புக் குழு மற்றும் பறக்கும்படை யினர் நடத்திய சோதனையில் தமிழகத்தில் ரூ.13 கோடியே 90 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது என்று தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும், நடத்தை விதிமீறல்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் நேற்று செய்தியாளர் களிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறிய தாவது:

தேர்தல் நடத்தை விதிகள், கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை, நிலை கண்காணிப்புக் குழு மற்றும் பறக்கும்படையினர் சோதனையில் ரூ.13 கோடியே 90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 18,768 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக் கப்பட்டுள்ளன. 61 உரிமம் காலாவதியான துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 32 துப்பாக்கிகளுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக காவல்துறையினர் 3,563 பேரிடம் ஒப்புதல் பிரமாணம் பெற்றுள்ளனர். 2 பேரைக் கைது செய்துள்ளனர்.

கூடுதல் பார்வையாளர்

தமிழகத்தில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 2 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, 38 மக்களவைத் தொகுதிகளுக்கு 76 பேர் மற்றும், மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு மட்டும் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னையைப் பொறுத்தவரை செலவினம் தொடர்பான முக்கியத்துவம் மற்றும் முந்தைய தேர்தல்களில் பெறப் பட்ட தகவல்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையமே முடிவெடுத்து, கூடுதலாக செலவினப்பார்வையாளரை அனுப்பியுள்ளது. இதுதவிர, தமிழகத்தில் செல வினத்தை முழுமையாக கண் காணிக்க சிறப்பு செலவின பார்வையாளராக மது மகாஜனையும் ஆணையம் அனுப்பியுள்ளது.

சிவிஜில் செயலி

சிவிஜில் கைபேசி செயலி மூலம், நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக கைபேசி எண் அல்லது இல்லாமலும் புகார் கொடுக்கலாம். எண் இல்லாமல் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கைபேசி எண் இருந்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல் அனுப் பப்படும். இதுவரை 579 புகார்கள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. இதில், 187 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. 201 புகார்கள் கைவிடப்பட்டுள்ளன. 45 புகார்கள் மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளது.

மேலும், ‘1950’ கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 60,853 அழைப்புகள் வந்துள்ளன. 54,789 அழைப்புகள் வாக்காளர் பட்டியல் விவரங்கள் கோரி வந்தன.

புதிய படிவங்கள்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்யும்போது படிவம் 26-ல் கூடுதல் தகவல்களை அளிக்க வேண்டும். இதில் புதியநடைமுறை ஒன்றையும் ஆணையம் சேர்த்துள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கலின்போது சி4, சி5 என்ற இரண்டு படிவங்களை வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

தன் மீதான குற்ற வழக்குவிபரங்களை அதில் குறிப்பிட்டி ருக்க வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரி, தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோரது பார்வைக்கு, அந்தப் படிவங்கள் இரண்டும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close