[X] Close

18 தொகுதி இடைத்தேர்தல் களம்: ‘மினி’ சட்டப்பேரவைத் தேர்தல்


18

  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 16:28 pm
  • அ+ அ-

பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட, ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வந்து சுயேச்சை வேட்பாளர் ஒருவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தண்டையார் பேட்டையைச்சேர்ந்தவர் கே.பாபு. அகில இந்திய மக்கள்நலப் பேரவையின் பொதுச்செயலராக உள்ளார். இவர் நேற்று பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

அப்போது தான் வளமாக இருப்பது போன்று அதிக அளவில் தங்கச் சங்கிலி, சட்டை பாக்கெட் நிறைய பணக்கட்டுகளுடன் வந்திருந்தார். அவரை அப்பகுதி பொதுமக்களும், தேர்தல் பணியாளர்களும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். அவர் தனது ஆடையில், ‘பணம் கொடுத்து ஓட்டு வாங்கியவன்’ என எழுதப்பட்டிருந்தது.

அவருடன் வந்தவர் ஆடையில், ‘பணம் வாங்கி ஓட்டு போட்டவர்’ என குறிப்பிட்டிருந்தது. மேலும், அவரது ஆடைகள் கிழிந்த நிலையிலும், அதில் ஒட்டு போட்டு தைத்த நிலையிலும் ஏழ்மை நிலையை உணர்த்தும் விதமாக இருந்தது. மற்றொருவர் ஆடையில் ‘ஓட்டுக்கு வாங்காதே நோட்டு’ என்ற விழிப்புணர்வு வாசகம் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து கே.பாபு கூறும்போது, ‘‘வேட்புமனு தாக்கல் செய்ய முன்மொழிய வர வேண்டும் என்று பெரம்பூர் தொகுதி வாக்காளர்களை அழைத்தால், எவ்வளவு பணம் கொடுப்பாய் என கேட்கின்றனர். அந்த அளவுக்கு அரசியல்வாதிகள் மக்களை பழக்கி வைத்துள்ளனர்.ஓட்டுக்கு பணம் தந்த அரசியல்வாதி வளமாக இருக்கிறார். பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டவர்கள் வறுமையில் உள்ளனர். யாரும் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என வலியுறுத்தி வருகிறேன்’’ என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close