[X] Close

ஹாட்லீக்ஸ் : வேலையைக் காட்டும் வேல்முருகன்!


hotleaks-velmurugan

வேல்முருகன்

  • kamadenu
  • Posted: 21 Mar, 2019 11:28 am
  • அ+ அ-

பாமக போட்டியிடும் 7 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டு வருகிறாராம் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். 

இதற்காக மஞ்சள் படை ஒன்றையும் களத்தில் இறக்கத் தயாராகி வருகிறாராம். 

இதுவரை வன்னியர் சங்கத்திலிருந்து ராமதாஸால் ஓரங்கட்டப்பட்ட முக்கியத் தலைகளையும் அவர்களுக்கு எதிராக பாமக செய்த துரோகங்களையும் தேர்தல் பிரச்சாரத்தில் தோலுரிக்கப் போவதாகச் சொல்லி வரும் வேல்முருகன், காடுவெட்டி குருவின் மகனையும் அம்மாவையும் ஏழு தொகுதிகளிலும் முக்கியமான பிரச்சார பீரங்கியாகப் பயன்படுத்தப் போகிறாராம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close