[X] Close

அதிமுக தேர்தல் அலுவலகத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்


dmk

  • kamadenu
  • Posted: 20 Mar, 2019 10:58 am
  • அ+ அ-

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் இலக்கியதாசன் அதிமுக தேர்தல் அலுவலகத்தில் வாக்கு கேட்டு அனைவரை யும் ஆச்சரியப்படுத்தினார்.

தமிழகத்தில் 18 பேரவை தொகுதி களுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் 6 தொகுதிகளாவது வென்றால்தான் அதிமுக ஆட்சியைத் தக்க வைக்க முடியும். இடைத்தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க திமுக, அமமுக மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதனால் தேர்தல் பணிகளில் அதிமுக, திமுகவினர் எலியும், பூனையுமாக செயல்பட்டு வருகின்றனர்.

நேற்று மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் இலக்கியதாசன் மானாமதுரையில் தலை வர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அப்போது தேவர் சிலை அருகே நின்ற அதிமுக நகரச் செயலாளர் விஜிபோஸிடம் வாக்குச் சேகரித்தார். தொடர்ந்து வீதி, வீதியாக வாக்குச் சேகரித்த அவர், அதிமுக தேர்தல் அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த அதிமுகவினரிடம் வாக்குச் சேகரித்தார். அதிமுகவினர் செய்வதறியாமல் விழித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close