[X] Close

தென்மாவட்டங்களில் 7 தொகுதிகளை நழுவவிட்ட அதிமுக


admk

  • kamadenu
  • Posted: 20 Mar, 2019 10:54 am
  • அ+ அ-

அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் இருந்தே, தெற்கு, மேற்கு மாவட்டங்களே அதிக வெற்றியைத் தேடி தந்தன. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருது நகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 9 தென்மா வட்டங்களில் 10 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 10 தொகுதிகளில் 2014 தேர்தலில் கன்னியாகுமரியை தவிர 9-லும் அதிமுகவே வெற்றி பெற்றது.

தற்போது 10 தொகுதிகளில் மதுரை, நெல்லை, தேனி ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக வெற்றி பெறக் கூடிய தொகுதிகளை, கூட்டணிக் கட்சிகளுக்கு தாரை வார்த்தது கட்சியினரிடம் அதிரு ப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போதைய ராமநாதபுரம் எம்பி அன்வர்ராஜாவுக்கு சீட் வழங்கப்படாததால் அதிமுகவில் இருக்கும் முஸ்லிம்கள் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், தற்போதைய மதுரை எம்பி கோபாலகிருஷ்ணனுக்கும் சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் யாதவர் சமூகத்தினரும் அதிருப்தியில் உள்ளனர். இது தங்களுக்குச் சாதகமாக அமையும் என அமமுக வேட்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close