[X] Close

ஒவ்வொரு தேர்தலுக்கும் முகாம் மாறுவது ராஜ கண்ணப்பனின் வாடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல்


udayakumar-speech

  • கா.சு.வேலாயுதன்
  • Posted: 20 Mar, 2019 10:42 am
  • அ+ அ-

ராஜகண்ணப்பன் முகாம் மாறுவது வாடிக்கையான செயல், அவரால் அதிமுகவுக்கு இழப்பு இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல் செய்தார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதய குமார் நேற்று மதுரை வந்தார். அவருக்கு உசிலம்பட்டி எம்எல்ஏ பா.நீதிபதி, சோழவந்தான் எம்எல்ஏ கே.மாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் அய்யப்பன், ஆர்.பஞ்சம்மாள், மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சவர்ணம் உட்பட பல்வேறு நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: அதிமுகவில் சாமானியனும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உதார ணமாக பரமக்குடி சட்டப் பேரவை தொகுதிக்கு சதன்பிரபாகரனும், மானாமதுரை தொகுதிக்கு நாகராஜனும், பெரியகுளம் தொகுதிக்கு முருகனும் அறிவிக் கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் தனது 18 வயது முதல் இயக் கப் பணி ஆற்றி வருகிறார். ஜெயலலிதாவால் இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டவர். மதுரை தொகுதி யில் போட்டியிடும் வி.வி.ஆர். ராஜ் சத்யன் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பதவியில் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர். ‘சீட்’ கிடைக்காவிட்டால் ஒவ்வொரு முறையும் முகாம் மாறுவது ராஜகண்ணப்பனின் வாடிக்கை.

அவரால் அதிமுகவுக்கு இழப்பு இல்லை. அவர் மீண்டும் தாய் கட் சிக்கு (அதிமுக) வந்து சேருவார். டிடிவி தினகரனைப் பொறுத்த வரை அவர் வெற்றி பெறும் நோக்கத்துக்காக வேட்பாளரை நிறுத்தவில்லை. வாக்குகளை பிரிப்பதற்காகத்தான் வேட்பாளரை நிறுத்துகிறார். ஆனால், அவரது நோக்கம் நிறைவேறாது. சூழ்நிலை அடிப்படையில்தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட் டுள்ளனர். வாய்ப்பு கொடுக்காத தால் கடந்த முறை எம்.பி.களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் சரியாக செயல்படவில்லை என்று பொருள் அல்ல என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close