[X] Close

4 மாவட்டத்தில் ஒரு தொகுதியில் மட்டும் போட்டி: அதிமுக தொண்டர்கள் சோர்வு


election-candidates

  • kamadenu
  • Posted: 20 Mar, 2019 10:38 am
  • அ+ அ-

விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 5 மக்களவை தொகுதிகள் உள்ளன. திமுக கூட்டணியில் கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 2 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாக்கு வங்கி உள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு வாக்கு வங்கி இல்லை. திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தென் மாவட்டங்களில் பரவலாக வாக்கு வங்கி உள்ளது. கூட்டணி பலத்தால் இந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என திமுக கூட்டணி தலைவர்களும், தொண்டர்களும் நம்புகின்றனர்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதி கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தென் மாவட்டங்களில் வாக்கு வங்கி இல்லை. பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு சில இடங்களில் மட்டும் வாக்கு வங்கி உள்ளது. அதிமுக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு பரவலாக வாக்கு வங்கி உள்ளது.

இருப்பினும், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் திருநெல்வேலி தொகுதியில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கும், தென்காசி தொகுதியை புதிய தமிழகம் கட்சிக்கும், விருதுநகர் தொகுதியை தேமுதிகவுக்கும் ஒதுக்கியுள்ளது.

நான்கு மாவட்டங்களில் வெறும் 1 தொகுதியில் மட்டும் அதிமுக போட்டியிடுகிறது. மற்ற 4 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது அக்கட்சி தொண்டர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி உள்ளது..

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close