[X] Close

அபாயகரமான வாக்குறுதிகள், அமல்படுத்தப் பட முடியாதவை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து அருண் ஜேட்லி விமர்சனம்


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 18:58 pm
  • அ+ அ-

தமாகாவுக்கு நிரந்தரமாக சைக்கிள் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணை யத்துக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களவைத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டி யிடும் தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2016-ல் சைக்கிள் சின்னம் கேட்டு நாங்கள் அளித்தமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதனை எதிர்த்து தமாகா தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது.

வாக்குகள் குறைந்ததால் சைக்கிள் சின்னத்தை தமாகா இழக்கவில்லை. காங்கிரஸுடன் இணைந்ததால்தான் இழந்தோம். எனவே, தமாகாவுக்கு நிரந்தரமாக சைக்கிள் சின்னத்தை ஒதுக்க வேண்டும். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள் ளோம். சைக்கிள் சின்னம் தமாகா வுக்கு நிரந்தரமாக கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close