[X] Close

இரட்டை இலை தாமரை கட்சி 40 தொகுதிகளிலும் போட்டி? - நெல்லை விவசாயி செய்த ‘வேடிக்கை’யால் பரபரப்பு


farmer-issue

  • kamadenu
  • Posted: 20 Mar, 2019 10:30 am
  • அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் இரட்டை இலை தாமரை கட்சி போட்டியிடுவதாக கூறி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திருநெல்வேலியை சேர்ந்த விவசாயி பொ. முத்தையா (70) என்பவரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி அருகே மானூர் மறக்குடி ரஸ்தாவை சேர்ந்தவர் முத்தையா. ஏராளமான ஆவணங்கள் மற்றும் பத்திரிகை செய்தி நறுக்குகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்தார். அவரிடம் போலீஸார் விவரங்களை கேட்டறிந்த பின்னர் உள்ளே அனுமதித்தனர். அப்போது முத்தையா கூறியதாவது:இரட்டை இலை தாமரை கட்சியில் மாநில தலைவராக உள்ளேன். மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் எங்கள் கட்சி போட்டியிடுகிறது. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

வேட்பு மனுவை முறையாக பூர்த்தி செய்யவில்லை என்பதாலும், உரிய ஆவணங்களை இணைக்காததலும் அவரது மனுவை ஏற்காமல் தேர்தல் அலுவலர் அவரை திருப்பி அனுப்பினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close