[X] Close

40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: மு.தம்பிதுரை


thambidurai-speech

தம்பிதுரை: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 20 Mar, 2019 10:29 am
  • அ+ அ-

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என மக்களவை துணைத்தலைவரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான மு.தம்பிதுரை தெரிவித்தார்.

கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை, மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி கரூரில் நேற்று நடைபெற்றது. இதில், பாஜக மாவட்டத் தலைவர் முருகானந்தம், கோட்ட பொறுப்பாளர் சிவசாமி, மாநில இளைஞரணி செயலாளர் கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதன்பிறகு செய்தியாளர் களை சந்தித்த மு.தம்பிதுரை கூறியது: அதிமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நாளை (இன்று) கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close