[X] Close

பாஜக 360 தொகுதிகளை கைப்பற்றும்: எச்.ராஜா நம்பிக்கை


hraja-interview

  • kamadenu
  • Posted: 20 Mar, 2019 10:25 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 360 தொகுதிகளைக் கைப்பற்றும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலில் நேற்று சிறப்பு யாகம் நடத்தியதுடன் மூலவர் முருகனை குடும்பத்தினருடன் வழிபட்ட எச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மத்திய பாஜக அரசு வலிமையுடன் இருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் 360 தொகுதிகளை பாஜக கைப்பற்றும். தமிழக அளவில் 30 முதல் 35 தொகுதிகளைக் கைப்பற்றும்.

தற்போது தமிழகத்தில் அமைந் துள்ள கூட்டணி தேச நலனில் அக்கறை கொண்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணி.

அமெரிக்க ராணுவம் பின்லேடனை சுட்டுக் கொன்றபோது, அவரது உடலை அமெரிக்காவைச் சேர்ந்த பொதுமக்கள் யாரும் கேட்கவில்லை. ஆனால், இந்தியாவிலுள்ள தேச விரோதிகளை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியபோது, அதை நம்பாமல் கொல்லப்பட்டவர்களின் உடல்களை காட்டுங்கள் எனப் பேசுகின்றனர்.

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்தும், மோடி செய்துள்ள சாதனை திட்டங்கள் குறித்தும் மக்களிடம் தெரிவித்து வாக்கு சேகரிக்கவுள்ளோம். தமிழகத்தின் முன்னேற்றத்தை முன்னிறுத்தி மக்களிடம் வாக்கு சேகரிப்போம். ஜிஎஸ்டியால் வியாபாரிகள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றார்.

பின்னர், தனது சொந்த ஊரான தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று எச்.ராஜா வழிபட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close