[X] Close

ஹாட்லீக்ஸ் : சிவகங்கை யாருக்கு?


hotleaks-sivagangai

கார்த்தி சிதம்பரம்

  • kamadenu
  • Posted: 19 Mar, 2019 10:54 am
  • அ+ அ-

திமுக கூட்டணியில் சிவகங்கை இந்த முறையும் காங்கிரஸுக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. கார்த்தி சிதம்பரம்தான் வேட்பாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

 ஆனால், சிதம்பரம் முகாம் கடந்த சில தினங்களாக சுரத்தில்லாமல் கிடக்கிறது. காரணம், கைதுக்கு நெருக்கும் வழக்கா அல்லது கார்த்திக்கு சீட் பெறுவதில் இழுபறியா என்று தெரியவில்லை. 

இருந்தாலும் தனக்காக தனது விசுவாசிகள் பலரையும் கட்சியில் விருப்ப மனு கொடுக்கச் சொல்லியிருக்கிறார் கார்த்தி.

 இதனிடையே, ‘சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் வரும் 25.3.19 அன்று களம் இறங்குகிறார்’ என்று நாச்சியப்பனின் ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் சத்தமில்லாமல் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close